தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதற்கு எதிராகப் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தவெக தரப்பில் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை படம் பொறிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த பகுஜன் சமாஜ் கட்சி தரப்பு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சியில் ‘பகுஜன் சமாஜ்’ என்ற பெயரைப் பயன்படுத்தியது தொடர்பாகவும்,
கட்சிக் கொடியில் யானை சின்னம் பொறிக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.