பதவி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில், ரஷ்யப் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில், காரில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம், ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக புதினால் நியமிக்கப்பட்ட ரோமன் ஸ்டாரோவோயிட், பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை ரஷ்ய அரசு வெளியிடவில்லை.
ரஷ்யாவின் புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.