புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லாளங்குடி ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், போராட்டம் காரணமாகப் புதுக்கோட்டை – பேராவூரணி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.