முதலமைச்சர் ஸ்டாலின் என்றாவது பொறுப்புடன் செயல்படுவாரா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடலூர் செம்மண்குப்பம் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடத்திற்கு முன்பே மத்திய அரசு ஒப்புதல் அளித்தும், மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காததால் பணி நிலுவையில் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அண்ணாமலை, தமிழகத்தில் ரயில்வே சுரங்கப்பாதை கட்ட அனுமதிப்பது போன்ற வளர்ச்சி பணிகள் நத்தை வேகத்தில் நடப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பணிகள் தாமதமாக நடப்பதற்கான காரணத்தை மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அண்ணாமலை, நீங்கள் என்றாவது பொறுப்புடன் செயல்படுவீர்களா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.