பிகார் மாநிலத்தில் பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாக பாம்பை ஜே.பி.யாதவ் என்ற பாம்பு பிடி வீரர் பிடிக்கச் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜே.பி.யாதவை பாம்பு கடித்துள்ளது. அதனைப் பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து பாம்பைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.