பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘THE GRAND COLLAR OF THE NATIONAL ORDER OF THE SOUTHERN CROSS’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பிரேசில் நாட்டிற்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் லுலா டி சில்வாவை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘THE GRAND COLLAR OF THE NATIONAL ORDER OF THE SOUTHERN CROSS’ விருதை அதிபர் லூலா டி சில்வா வழங்கி கௌரவித்துள்ளார். இந்நிலையில், இந்த விருது தனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை என பிரதமர் மோடி தெரிவித்தார்.