ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து
மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதையடுத்து பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் தொடர்ந்து 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.