ஜம்மு-காஷ்மீரின் தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்வில் பங்கேற்ற யாத்ரீகர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தாவி நதிக்கரையில் நேற்று ஆரத்தி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது, பஜனை பாடல்களுக்கு யாத்ரீகர்கள் இணைந்து நடனமாடினர்.