காரைக்குடி அருகே சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் நடந்த 63 நாயன்மார் வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை கிராமத்தில் வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார் வீதி உலா கோலாகலமாக தொடங்கியது.
கோயில் வளாகத்தில் சுவாமி வீரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தொடர்ந்து சுவாமி வீரசேகரர் முன்னே செல்ல, தபசு காட்சியில் 63 நாயன்மார் வீதி உலா நடைபெற்றது. 63 தவில் நாதஸ்வர இசைக் கச்சேரியுடன் சென்ற வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.