சேலத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஜாகீர் அம்மா பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், பொருட்களைக் கொடுக்காமல் ஊழியர்கள் தாமதப்படுத்துவதாகவும் கூறி சம்மந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டுக் கடந்த வாரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து சோழம்பள்ளம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரேஷன் கடைகளை முற்றுகையிட்ட மக்கள், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.