ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
கேட்டலோனியா பகுதியில் உள்ள மலைகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
இதனால், லட்சக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.