ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாகக் கட்டிய விடுதியை இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சோளிங்கர் நகர மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி அசோகன் செயல்பட்டு வருகிறார்.
இவர் அரசுக்குச் சொந்தமான இடத்தில் தங்கும் விடுதி கட்டிவருவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சட்டவிரோதமாகக் கட்டப்படும் விடுதியை இடித்து அகற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் குவிந்த நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் தங்கும் விடுதியை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.