மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் இறைச்சிக் கடைகளும், மரக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் பேப்பர்களுடன் நின்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.