சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் சுப்மன் கில் நிறையச் சதங்களை அடிப்பார் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற YouWeCan என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் சுப்மன் கில் அற்புதமாக பேட்டிங் செய்ததாகப் பாராட்டினார்.
மேலும், இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்திறன் சிறப்பாக இருந்தது என்றும், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் அற்புதமாகப் பந்து வீசியதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.