குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்குப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.