வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? - அண்ணாமலை கேள்வி!
Oct 14, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி என்று என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், பொதுமக்கள் வயல் வரப்பு ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தொடங்கி, மருத்துவ அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

மழைக்காலங்களில், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தாக்குதலுக்கும் பொதுமக்கள் உள்ளாக நேர்கிறது. மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகம் ₹5,886 கோடி நிதியைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுத் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே? முதலமைச்சர் ஸ்டாலினின்  கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினந்தோறும் ஒரு நாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? தமிழகக் கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை விட முக்கியமா உங்கள் விளம்பர நாடகங்கள்? உங்கள் வேஷங்களை தமிழக மக்கள் விரைவில் கலைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKஅண்ணாமலை கேள்விmk stalin news todayWhen is Chief Minister Stalin going to stop the drama of dressing up and performing? - Annamalai Question
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

Next Post

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies