வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? - அண்ணாமலை கேள்வி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 07:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி என்று என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், பொதுமக்கள் வயல் வரப்பு ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தொடங்கி, மருத்துவ அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

மழைக்காலங்களில், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தாக்குதலுக்கும் பொதுமக்கள் உள்ளாக நேர்கிறது. மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகம் ₹5,886 கோடி நிதியைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுத் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே? முதலமைச்சர் ஸ்டாலினின்  கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினந்தோறும் ஒரு நாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? தமிழகக் கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை விட முக்கியமா உங்கள் விளம்பர நாடகங்கள்? உங்கள் வேஷங்களை தமிழக மக்கள் விரைவில் கலைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKஅண்ணாமலை கேள்விmk stalin news todayWhen is Chief Minister Stalin going to stop the drama of dressing up and performing? - Annamalai Question
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

Next Post

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies