விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கோணை ஊராட்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டது.
இதனை கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஆனால் அன்று ஒரு நாள் மட்டுமே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதன் பிறகு கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.