அண்மையில் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில் நிதியை எடுத்து கல்லூரி தொடங்க தமிழக அரசு பயன்படுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
கல்விக்கு என தனி நிதி இருக்கும் போது கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன் என்றும், அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணற்ற கல்லூரிகள் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை பொறுக்காத திமுகவினர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேசுவதாக வழக்கம் போல் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்
அறிவாலய ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளை இந்து ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள்?
அறநிலையத்துறை நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்தலாம் என சட்டத்தில் இடம் உள்ளதா?
அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதே?
அதில் வாதாடி அனுமதி பெறலாமே?
இந்துக்கோயில் நிதியை மற்ற துறைக்கு பயன்படுத்தும் அறிவாலய அரசு, தேவாலயம் அல்லது மசூதி நிதியை பயன்படுத்தலாமே? ஏன் தயக்கம்?
அதன் மீது கை வைத்தால் சிறுபான்மை வாக்கு பறிபோகும் என்ற அச்சமா?
இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?
கோயில்களில் காணிக்கை அளிக்கும் இந்து பக்தர்களின் நோக்கம் ஆலயங்களின் அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும் என்பதே.
ஆனால் கோயில்களில் கோடிக்கணக்கில் வருமானம் வந்தும் கூட, முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறதா?
இறைவனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பதே உண்மை..
கோயில் வருமானததில் ஒவ்வொரு ஆலயத்திலும் ஏசி வசிதி செய்ய முடியும்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்துக்கள் இடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
எனவே வழக்கம் போல், சமூக நீதி, திராவிட மாடல் என பேசி இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை பெறலாம் என நினைத்தால் அது ஈடேறாது என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.