மும்பையில் ஆகாஷ்வானி எம்எல்ஏ விடுதி உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உணவு கெட்டுப் போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ வைரலான நிலையில், அவருக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் மீது சஞ்சய் கெய்க்வாட் தாக்குதல் நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த சம்பவம் சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளதாகவும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.