கோயில் பணத்தில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் இது ஆன்மிக மாநாடு அல்ல எனக்கூறிய துணை முதல்வர் உதயநிதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் இதுகுறித்து பேசியவர்,
உதயநிதி, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என்று எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
போதைப்பொருள் உபயோகிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் வரும் தலைமுறையைக் காப்பாற்ற திமுக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தினார்.
கடலூர் ரயில் விபத்தில் தவறிழைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அஜித்குமார் மீது பொய்வதுக்குக் கொடுத்த நிகிதா என்ன ஆனார்? என எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியே தமிழக மக்களைக் காப்பாற்றும் என்று எச்.ராஜா கூறினார்.