சேலம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைட்டமின் மாத்திரைகளைக் கொட்டி எரித்த அங்கன்வாடி பணியாளரிடம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஒரு பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு சார்பில் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாத்திரைகளை மாணவர்களுக்கு முறையாக வழங்காத அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி வளாகத்தில் கொட்டி எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்த செய்தி வைரலான நிலையில், அங்கன்வாடி பணியாளர் பிருந்தாவிடம், மாநகராட்சி மருத்துவக் குழுவினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத்திரைகளை எலி கடித்ததால் அதனை எரித்ததாக அங்கன்வாடி பணியாளர் பிருந்தா கூறிய நிலையில், எரியாத மற்ற மாத்திரைகளைக் கைப்பற்றி மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.