ஆனி மாத பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்பட்டு, ஆகம விதிப்படி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
அதிகாலை முதலே வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, 14 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக அண்ணாமலையார் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.