நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!
Jun 4, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் ருக்மாங்கதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜரானார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர்.

ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறும் ஆணையிட்டனர்.

Tags: சென்னை மாநகராட்சி ஆணையர்Chennai Corporation Commissioner appears in person in contempt of court case and apologizesநீதிமன்ற அவமதிப்பு
ShareTweetSendShare
Previous Post

ஆனி மாத பௌர்ணமி : அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

ஹவாய் தீவில் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை!

Related News

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies