நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!
Jul 11, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் ருக்மாங்கதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜரானார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர்.

ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறும் ஆணையிட்டனர்.

Tags: சென்னை மாநகராட்சி ஆணையர்Chennai Corporation Commissioner appears in person in contempt of court case and apologizesநீதிமன்ற அவமதிப்பு
ShareTweetSendShare
Previous Post

ஆனி மாத பௌர்ணமி : அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

ஹவாய் தீவில் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை!

Related News

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies