கட்சியில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “மதிமுகவை அழிக்க மல்லை சத்யா திட்டமிட்டதாக தெரிவித்தார். மதிமுக துணை பொதுச்செயலாளர் என மல்லை சத்யா கூறியது கிடையாது என்றும், மதிமுகவில் இருந்து விலகியவர்களை மல்லை சத்யா திமுகவில் கொண்டுபோய் சேர்த்துள்ளார் என்றும் கூறினார்.
மதிமுகவில் இருந்து விலகியவருடன் மல்லை சத்யா 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும், மதிமுகவில் இருந்து விலகியவர்கள் தன்னுடன் வருவார்கள் என திமுக தலைவரிடம் கூறியுள்ளதாகவும் வைகோ சாடினார்,