கரூர் மாவட்டம், குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார். குளித்தலை பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நால்வர், செய்தியாளர் சிவாவை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதில் காயமடைந்த சிவா, குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தாக்குதல் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், செய்தியாளருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், சட்டம் – ஒழுங்கு மோசமடைந்து உள்ளதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.