பிரமாண்டமாக நடைபெற்ற திருச்செந்தூர் கும்பாபிஷேகம் மூலமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயில் முன்பு உள்ள அஹோபில மடத்தில் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றதாக தெரிவித்தார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கும்பாபிஷேக விழாவை கண்டு பிரமிப்படைந்ததாக கூறிய அவர், இதன்மூலமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தற்போது நம்பிக்கை வந்துள்ளதாக கூறினார்.