உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் 5 வயதுக் குழந்தையை நாய்கள் கடித்துக் குதறிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7ஆம் தேதி குஷிநகரின் காஸ்யா பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது ஆண் குழந்தையை 3க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்துக் குதறின.
அலறல் சத்தம் கேட்டு ஓட்டி வந்த பெண் ஒருவர், நாய்களிடம் இருந்து குழந்தையை மீட்டார்.
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.