தமிழக மக்களின் வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பு அறப்போர் இயக்கம் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராமன், மக்களின் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். கிறிஸ்டி நிறுவனம் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், கிறிஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கிறிஸ்டி நிறுவனத்தைக் கருப்பு பட்டியலில் சேர்க்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் ஜெயராமன் தெரிவித்தார்.