ருமேனியாவின் சினாயாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் 14 பேர் காயமடைந்தனர்.
மலை நகரமான சினாயாவில் உள்ள பிரஹோவா பள்ளத்தாக்கைப் புயல் தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அப்பகுதியைப் பலத்த காற்றுடன் புயல் தாக்கியது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன.