ஈரோடு மாவட்டம், சிலங்காட்டு வலசு பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலாங்காட்டு வலசு பகுதியில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இரவு நேரங்களில் கால்நடைகளைச் சிறுத்தை வேட்டையாடி வருகிறது.
இதுகுறித்த பொதுமக்களின் புகாரின் பேரில், இரு வேறு இடங்களில் மட்டும் வனத்துறையினர் கூண்டுகளை அமைத்துள்ளனர்.
ஆனால், அதன் பின்னர் சிறுத்தையைப் பிடிக்க எவ்வித நடவடிக்கையையும் வனத்துறையினர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விவசாயப் பணிகளுக்குக் கூட வெளியே வரமுடியாமல் அச்சத்தில் தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.