மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
போபாலில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக இரண்டு மாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. தொடர்ந்து அங்குச் சென்ற அதிகாரிகள் கட்டடத்தை அகற்ற அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஊழியர்கள் போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கட்டடத்தை அப்புறப்படுத்தினர்.