நாகையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் சிக்கியது.
பால்பண்ணை சேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் அறையில் இருந்து 50 ஆயிரத்து 200 ரூபாயும், பாதுகாப்பு அறையில் இருந்து 98 ஆயிரத்து 800 ரூபாயும், இடைத்தரகர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 500 ரூபாயும் எனக் கணக்கில் வராத ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.