மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், 15 மணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டில் சிக்கித் தவித்த தொழிலாளியை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தானேவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் சுவற்றில், தொழிலாளி ஒருவர், லிஃப்ட் மூலம் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் தொழிலாளி லிஃப்டில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்து அங்குச் சென்ற மீட்புப் படையினர், தொழிலாளியைப் பத்திரமாக மீட்டனர்.