ஒடிசா மாநிலத்தில் ஒட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பயணிகள் வாகனங்கள் போதிய அளவில் இயங்காததால் போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானர்கள்.