டெல்லி டோக்ரி வாலன் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசாத் மார்க்கெட்டுக்கு அருகே உள்ள இந்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் 3 கடைகளும், மேல் தளத்தில் கிடங்கும் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.