கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள ‘மோனிகா’ பாடல் வெளியானது.
‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் நடித்துள்ளார்.
அண்மையில் படத்தின் முதல் பாடலான ‘சிக்கிடு’ பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள ‘மோனிகா’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.