அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ஆறு புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.