இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணையின் சோதனை, ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய இந்த ஏவுகணை சோதனையில், ரேடியோ ஃப்ரீக்வென்சி சீக்கர் பயன்படுத்தப்பட்டது. வழக்கமாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கப்படும் சீக்கர்கள் இம்முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அஸ்திரா ஏவுகணை Su-30 MKI எனும் போர் விமானத்தில் இருந்து இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது. பல விதமான காலநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வாய்ந்த அஸ்திரா ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பாதுகாப்புத்துறைக்கு கிடைத்த வெற்றி என, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.