சென்னை மணலி MFL விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் நோக்கிப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
லாரியை மித்துரேஷ் என்பவர் மது போதையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக அங்குமிங்குமாய் தள்ளாடியபடி சென்ற லாரியை பின்னால் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையில் கவிழ்ந்து, கண்ணாடிகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்தன.
லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.