முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் 84 நாட்களுக்குப் பிறகு மருத்துவ சேவை தொடங்கியது.
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை ஏப்ரல் 18-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
பணிகள் நிறைவடையாமல் கட்டடம் திறக்கப்பட்டதால், மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்குப் பிறகு மருத்துவ சேவைகள் தொடங்கின.
தொடக்க விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ சந்திரன், குத்து விளக்கேற்றி சேவையைத் தொடங்கி வைத்து, நோயாளிகளை வரவேற்றார்.