தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.
ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேராத சிலர் முயன்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.