மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16வது “ரோஜ்கர் மேளா” நிகழ்ச்சியின் மூலம் 51 ஆயிரம் பேருக்குப் பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி வழங்கினார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டில் உள்ள இளைஞர்களின் ஆற்றலே இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் எனத் தெரிவித்தார்.
தனியார்த் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் இந்தியா தனிக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்புத்துறையில், ஏற்றுமதி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டுப் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள், இளைஞர்களுக்குப் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.