விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையில், யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செஞ்சி கோட்டை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 12 இடங்களை வரலாற்றுச் சின்னமாக அங்கீகரித்து யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள், இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.