திருப்புவனம் லாக்கப் கொலை சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் போலீசாரால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை சிவானந்தா சாலையில் தவெக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. அக்கட்சி நடத்தும் முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமான இதில், விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.