துணை முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக தொண்டரை, அமைச்சர் எ.வ.வேலு தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கீழ்பென்னாத்தூர் பகுதியில் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேடையில் நின்றிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை, பட்டு வேட்டி, பூங்கொத்து உள்ளிட்டவற்றை கொடுத்து வரவேற்றனர்.
அப்போது, தொண்டர் ஒருவர், பட்டு வேட்டியை கையில் கொடுக்காமல், உதயநிதி ஸ்டாலின் தோளில் போர்த்த முற்பட்டார். இதனைக் கண்ட அமைச்சர் எ.வ.வேலு, அவரை இழுத்து தாக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.