தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை மேற்கொள்ளவிருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பு அறிவிக்கை! அறப்பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் களைச்செடியான திமுக ஆட்சியை அகற்றுவதுடன், பட்டிதொட்டியெங்கும் நமது பாஜகவின் வேர்களைப் பலப்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை தமிழகத்தில் அமையச் செய்ய அடித்தளமிடும் அரும்பணியே தங்களுடையது என தெரிவித்துள்ளார்.
எனவே, இதில் மனப்பூர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள் என உளமார வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடைய திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் திரு.VSM. கந்தசாமிமாற்றுக் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமது முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சியில் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் பாஜகவில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருகிவதாகவும், இது நம் இளைஞர்களுக்கு தேசத்தின் மீது கொண்டிருக்கும் பற்றையும் பாஜக மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.