திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்தால் சேதமடைந்த 4 ரயில் பாதைகளும், ரயில்வே ஊழியர்களின் 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட தீ விபத்தில் தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.
பெரியகுப்பத்தில் ஒரு பகுதியில் உள்ள தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு அரக்கோணம் மார்க்கமாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மறுமார்க்கம் செல்லும் பகுதியில் உள்ள தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பெரியகுப்பம் பகுதியில் இரவில், விட்டு விட்டு மழை பெய்தபோதும், மழையைப் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து 42 மணி நேரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு புதிய தண்டவாளங்களை அமைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை – அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகளும் முற்றிலும் சீரமைக்கப்பட்டு, விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.