ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!
Sep 2, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 09:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவள்ளூர் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் பரவிய கரும்புகையால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கண் எரிச்சலாலும், மூச்சுத்திணறாலும் சிரமத்திக்குள்ளாகி உள்ள மக்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித உதவியும் செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மணலியிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு மைசூர் நோக்கிச் சென்று  கொண்டிருந்த சரக்கு ரயில் திருவள்ளூரைக் கடந்த போது எதிர்பாரா விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

எண்ணெய் டேங்கர்களில் ஏற்பட்ட உராய்வால் ஒரு டேங்கரில் பற்றிய தீ அடுத்தடுத்த டேங்கர்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. காவல்துறை, தீயணைப்புத்துறை, ரயில்வேத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை என பல்வேறு துறையினர் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ரயிலில் பற்றி எரிந்த தீ அணைந்து ரயில் போக்குவரத்து சீரானாலும், கரும்புகையால் ஏற்பட்ட சிரமத்திலிருந்து மீளமுடியாமல் அப்பதி மக்கள் தவித்து வருகின்றனர்.

அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் வானுரய அளவிற்குப் பரவிய கரும்புகை அருகிலிருந்து குடியிருப்புகளையும் முழுமையாகச் சூழ்ந்தது. என்ன நடக்கிறது என்பதை அறியாத பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடியுள்ளனர். தீ விபத்தைத் தடுப்பதில் செலுத்திய கவனத்தை, பாதிக்கப்பட்ட தங்களின் மீது செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

ரயில் பாதைகளுக்கு அருகிலேயே வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு ரயில் கடக்கும் போதும் ஏற்படும் அதிர்வுகளால் ஒருவித  அச்ச உணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர். டேங்கர் லாரியிலிருந்து வெளிவந்த கரும்புகையால் இன்றளவும் கண் எரிச்சல் இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற இடத்தில் வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவற்றைச் சிறிதளவும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், விபத்திற்குப் பின் தங்களைத் தேடி வந்து பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலிண்டர் பற்ற வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதால் உணவுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்து இரண்டு நாட்களைக் கடந்தும் அதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை என்பதை அப்பகுதி மக்கள் சந்திக்கும் சிரமங்கள் எடுத்துரைக்கின்றன. விபத்து நடைபெற்றவுடன் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஒரு மருத்துவ முகாமை அமைத்து உரியச் சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது

Tags: Tiruvallur train accidentTrain accident causes black smoke: People of Thiruvallur are suffering from eye irritation and shortness of breathரயில் விபத்தால் கரும்புகைமூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்Tiruvallur district news
Share
Tweet
SendShare
Previous Post

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

Next Post

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies